நான்கு கேமராக்களுடன் அறிமுகமாகும் மோட்டோரோலா ஒன் Zoom.!
மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் விரைவில் மோட்டோரோலா ஒன் Zoom என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா ஒன் ணுழழஅ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

மோட்டோரோலா ஒன் Zoom ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் சிப்செட் வசதிஇடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மோட்டோரோலா ஒன் Zoom சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 25எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மோட்டோரோலா ஒன் Zoom சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது என்றும்,பின்பு 18வாட்பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இவற்றுள் உள்ளது என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications