6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன்.!
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு துவகத்தில் அதிக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்த்த நிலையில், அந்நிவனம் எதுவும் அறிமுகம் செய்யவில்லை. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் சார்பில் புதிய
அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி விரைவில் மோட்டோரோலா ஒன் விஷன் என்ற ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 9610 எஸ்ஒசி சிப்செட் அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸிநோஸ் 9610 எஸ்ஒசி சிப்செட்
பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டோரோலா ஒன் விஷன் சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனின் வெளியிடப்பட்டுள்ளது, அதைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு மற்றும் 1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்:
இக்கருவி அக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9610 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் என்று
கூறப்படுகிறது.

மெமரி:
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்
மாடல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 48எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 13எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:
கண்டிப்பாக மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் விலை சற்று உயர்வாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications