2019 மே 15: அசத்தலான மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

|

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 15-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 மே 15: அசத்தலான மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

முதற்கட்டமாக இந்த மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் மாடல் பிரேசிலில் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த விழாவில் மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போன் அறிமுகமாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு மற்றும் 1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி அக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9610 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மெமரி:

மெமரி:

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 48எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 13எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:

பேட்டரி:

கண்டிப்பாக மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் விலை சற்று உயர்வாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Motorola One Vision to launch on May 15: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X