48எம்பி கேமராவுடன் களமிறங்கும் மோட்டோரோலா ஒன் விஷன் : புகைப்படங்கள் வெளியானது.!

|

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் மாடல் வரும் மே-15-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது, இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக  நீலம் மற்றும் பழுப்பு நிறத்தில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

டிஸ்பிளே:

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு மற்றும் 1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்:

இக்கருவி அக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9610 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மெமரி:

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 48எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 13எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:

கண்டிப்பாக மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் விலை சற்று உயர்வாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Motorola One Vision renders leaked, show punch-hole display and colour variants: Read more about this in Tamil GizBot

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more