ஜீன் 20: 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன்.!
இந்திய சந்தையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் வரும் ஜீன் 20-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸமார்ட்போன் மாடல் ஏற்கனவே சவுதி அரேபியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது,
பின்பு 1080x2520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

ஆக்டோ-கோர் :
இக்கருவி 2.2ஜிகாஹெர்ட்ஸ் அக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9609 எஸ்ஒசி பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.

மெமரி:
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்
மாடல் சஃபையர் புளு, பிரவுன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

கேமரா:
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த
ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பரைமரி சென்சார் + 5எம்பி இரண்டாவது பிரைமரி சென்சார் என் இரண்டு கேமராக்கள்
இடம்பெற்றுள்ளது. பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி- விலை:
இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் மைக்ரோபோன் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம். மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.23,520-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications