Motorola One Vision ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.!
மோட்டோரோலா தனது மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ஐ வழங்கத் தொடங்கியுள்ளது. மேலும் புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளுடன் சமீபத்திய பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது. விரைவில் அனைத்து மோட்டோரோலா ஒன் விஷன் பயனர்களுக்கு இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கொண்டுவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் விஷன் டிஸ்பிளே
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 1080x2520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

ஆக்டோ-கோர் -ஆண்ட்ராய்டு 9.0 பை
இக்கருவி 2.2ஜிகாஹெர்ட்ஸ் அக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9609 எஸ்ஒசி பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.

128ஜிபி உள்ளடக்க மெமரி
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சஃபையர் புளு, பிரவுன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

ஒன் விஷன் கேமரா
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பரைமரி சென்சார் + 5எம்பி இரண்டாவது பிரைமரி சென்சார் என் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications