25எம்பி செல்பீ கேம்: மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?
மோட்டோரோலா நிறுவனம் சவுதி அரேபியாவில் தனது மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்தில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் விஷன் சாதனத்தின் பின்புறம் 4டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. பின்பு கைரேகை சென்சார் பேக் பேனலில் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு
அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 1080x2520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

ஆக்டோ-கோர் :
இக்கருவி 2.2ஜிகாஹெர்ட்ஸ் அக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9609 எஸ்ஒசி பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.

மெமரி:
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சஃபையர் புளு, பிரவுன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

கேமரா:
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பரைமரி சென்சார் + 5எம்பி இரண்டாவது பிரைமரி சென்சார் என் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி- விலை:
இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் மைக்ரோபோன் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம்
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.23,520-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications