நான்கு ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் மிரட்டலான மோட்டோரோலா ஒன் ப்ரோ.!
மோட்டோரோலா ஒன் ப்ரோ சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும்.
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோரோலா ஒன் ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் சில அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சாம்பல், ஊதா, தங்க நிறங்களில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பின்புறம் நான்கு கேமராக்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க முடியும். மேலும் அன்மையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பவர், மோட்டோரோலா ஒன் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோரோலா ஒன் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு வெளிவரும், பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு
வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செய்றகை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
மோட்டோரோலா ஒன் ப்ரோ சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என அந்நிறுவன் தெரிவித்துள்ளது.
பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்பதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.

பேட்டரி:
மோட்டோரோலா ஒன் ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன்கிடைக்கும்.


Click it and Unblock the Notifications