Home
Mobile

ரூ.15,999 விலையில் மோட்டோரோலா ஒன் பவர் அறிமுகம்.!

இக்கருவி 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 12எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்று மோட்டோரோலா ஒன் பவர் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.15,999 விலையில் மோட்டோரோலா ஒன் பவர் அறிமுகம்.!

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை அக்டோபர் 5-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று மோட்டோரோலா நிறுவனம் சார்பாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் மாடல் 6.28-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 636:

ஸ்னாப்டிராகன் 636:

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த
ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

டூயல் ரியர் கேமரா:

இக்கருவி 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 12எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனின் கேமராவில் இடம்பெற்றுள்ளது.

விலை:

விலை:

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும்
மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Motorola One Power with 628 inch Full HD display launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X