பிளிப்கார்ட்: மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
இக்கருவி 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 12எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
தற்சமயம் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் மாடல் 6.28-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 636:
மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:
மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

டூயல் ரியர் கேமரா:
இக்கருவி 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 12எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனின் கேமராவில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி
ந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications