செப்டம்பர் 24: 5000எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் வெளிவரும் மோட்டோரோலா ஒன் பவர்.!
இக்கருவி 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 12எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் செப்டம்பர் 24-ம் தேதி மோட்டோரோலா ஒன் பவர் என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது, இதை தொடர்ந்து இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள், கைரேகை சென்சார் போன்ற ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸமார்ட்போன் வெளிவரும்.
ஸ்னாப்டிராகன் 636:
மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக்
கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும்
என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

டூயல் ரியர் கேமரா:
இக்கருவி 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 12எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனின் கேமராவில் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:
மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் பட்ஜெட் விலையில் தான் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.


Click it and Unblock the Notifications