அடுத்தவாரம்: மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
மோட்டோரோலா நிறுவனம் அடுத்தவாரம் தனது புதிய மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் சில குறிப்புகள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அவற்றைப் பார்ப்போம்.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன மாடல் 6.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மோட்டோரோலா ஒன் மேக்ரோ சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும்.
மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட்,,வைஃபை, என்எப்சி, 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஹீலியோ பி60 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications