குறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன்.!
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் மாடலை சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது, இந்த சாதனம் குறிப்பிட்ட சலுகையுடன் இன்று பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழுவிபரங்களைப் பார்ப்போம்.

மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனின் விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ நிறுவனம் சார்பில் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2,200-வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

மோட்டோரோலா ஒன் மேக்ரோ டிஸ்பிளே
மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 1520 x 720 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹீலியோ பி70 சிப்செட்
மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஹீலியோ பி70 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி
மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மோட்டோரோலா ஒன் மேக்ரோ கேமரா
மோட்டோரோலா ஒன் மேக்ரோ சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா ஒன் மேக்ரோ பேட்டரி
மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட்,வைஃபை,புளூடூத் 5.0, என்எப்சி, 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








