Home
Mobile

மோட்டோரோலா ஒன் ஹைப்பர்: மிரட்டலான பாப் அப் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

மோட்டோரோலா நிறுவனம் முதல் முறையாக பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் கூடிய புதிய மாடல் ஸ்மார்ட்போனைஅறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா ஒன் ஹைப்பர் என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சம் மற்றும் விலை விபரம் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் மாடல் தான் மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்ஃபி கேமரா மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் டூயல் கேமரா மாடியுள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சாம்சங் இன் 64 மெகா பிக்சல் கொண்ட ஐசோசெல் பிரைட் GW1 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

பாப்-அப் செல்ஃபி கேமரா

பாப்-அப் செல்ஃபி கேமரா

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன், புதிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் மிரட்டலான புதிய சாப்ட்வேர் அப்டேட் உடன் வெளிவந்துள்ளது. பெசல் இல்லாத நாட்ச் இல்லாத எண்டு-டு-எண்டு ஸ்கிரீன் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. விவோ 17 ப்ரோ ஸ்மார்ட்போனை போல் இடது மேல் மூலையில் பாப்-அப் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இல்லையா?

இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இல்லையா?

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் உடன் கிளாஸ் லேயர் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனில் எண்டு-டு-எண்டு ஸ்கிரீன் டிஸ்பிளே இருந்தும் இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் கொடுக்கப்படவில்லை, அதற்குப் பதிலாக போனின் பின்பகுதியில் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை என்ன ?

விலை என்ன ?

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனின் விலை $400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.28,600 ஆகும். மோட்டோரோலா ஒன் ஹைப்பர் டீப் ஸீ ப்ளூ, டார்க் அம்பர் மற்றும் ஃபிரெஷ் ஆர்ச்சிட் ஹியூஸ் வண்ணங்களில் வருகிறது.|மோட்டோரோலாவின் வலைத்தளத்தில் இன்று முதல் ஐரோப்பாவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் சிறப்பம்சம்

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் சிறப்பம்சம்

  • 6.5' இன்ச் எல்சிடி ஐபிஎஸ் ஸ்கிரீன் கொண்ட முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட்
  • 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ்
  • எஸ்.டி கார்டு மூலம் 1டிபி வரையிலான ஸ்டோரேஜ்
  • ஸ்டாக் ஆண்ட்ராய்டு 10
  • 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
  • 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
  • 32 மெகா பிக்சல் கொண்ட பாப் அப் செல்ஃபி கேமரா
  • 45W ஹைப்பர் சார்ஜிங்
  • 4,000 எம்.ஏ.எச் பேட்டரி
  • இந்தியாவில் எப்பொழுது?

    இந்தியாவில் எப்பொழுது?

    இந்தியாவில் மோட்டோரோலா ஒன் ஹைப்பர் எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்ற சரியான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட காரணத்தினால், ஸ்மார்ட்போன் சந்தைக்கு முக்கிய இடமான இந்தியச் சந்தையிலும் நிச்சயம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola One Hyper: Introduced with the intimidating pop-up selfie camera : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X