Just In
- 10 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 13 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 13 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 14 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Sports
ஆட்டத்தையே மாற்றிய கேட்ச்.. வெற்றியால் கதறி அழுத கேப்டன்..U-19 இந்திய மகளிர் அணிக்கு எவ்வளவு பரிசு?
- News
காரைக்குடி அருகே பெரியார் சிலை அகற்றம் சர்ச்சை.. டிஎஸ்பி, தாசில்தார் மீது அதிரடி நடவடிக்கை!
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மிரட்டலான மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் நாளை அறிமுகம்! விலை என்ன இருக்கும்?
மிரட்டலான தோற்றத்தில், அட்டகாசமான அம்சங்களுடன் அன்மையில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன் சாதனம் தான் மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன். இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் நாளை, அதாவது ஜூன் 16ம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது, இதன் விலை மற்றும் முழு விபரங்களைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ்
மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5' இன்ச் 1080 x 2340 பிக்சல் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் நாட்ச் இல்லாத முழு டிஸ்பிளே யுடன் பாப் அப் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. சிறந்த பாதுகாப்பு வசதியுடன் மிரட்டலான டிசைனில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு நாளை இந்திய சந்தையில் கால்பதிக்கத் தயாராகவுள்ளது.

1TB வரையிலான கூடுதல் மெமரி
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் உடன், அட்ரினோ 618 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் 1TB வரையிலான கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் விபரம்
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 8 மெகா பிக்ஸ்ல கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லெனஸ் கேமரா என மொத்தம் நான்கு கேமராக்களை எல்இடி ஃபிளாஷ் உடன் கொண்டுள்ளது. சிறப்பினை செல்ஃபீ அனுபவத்திற்கு 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபீ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு விருப்பங்கள்
மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன், 15W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் மிக பெரிய 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன், புளூடூத் வி 5, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை 4 ஜி வோல்டி, என பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.

விலை, விற்பனை மற்றும் கலர் விபரம்
மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸில் பின்புற பின்னர் பிரிண்ட் சென்சார் உள்ளது. மேலும் இது பிரத்யேக கூகிள் அசிஸ்டென்ட் பட்டனையும் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் தோராயமாக ரூ. 25,400 என்ற விலைக்குள் இந்தியாவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மூன்லைட் வைட் மற்றும் ட்விலைட் ப்ளூ நிறத்தில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470