புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.!
சீன பொருட்களுக்கு எதிராக பல்வேறு இந்தியர்கள் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர், இதைப் பயன்படுத்தி சரியான நேரத்தில் அன்மையில் அறிமுகமான மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ஸ்மார்ட்போனுக்கு விலை உயர்வை அறிவித்துள்ளது
மோட்டோரோலா நிறுவனம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ரூ.16,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, பின்பு இப்போது அறிவிக்கப்பட்ட விலைஉயர்வு மூலம் ரூ.17,499-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விலை ஏற்கனவே பிளிப்கார்ட் தளத்தில் பிரதிபலிக்கிறது, எனவே வருகிற திங்களன்று திட்டமிடப்பட்ட அடுத்த விற்பனைக்கு இந்த புதிய விலை நிர்ணயம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்டி பிளஸ் டிஸ்பிளே
6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, பின்பு 1,080x2,340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 618ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

128ஜிபி உள்ளடக்க மெமரி
மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

64எம்பி மெயின் கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்+ 5எம்பி மேக்ரோ என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி ஃபிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி
மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய
கவலை இருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது புளூடூத் வி 5, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை 4 ஜி வோல்டி, என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது. மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸில் பின்புற கைரேகை சென்சார் உள்ளது. மேலும் இது பிரத்யேக கூகிள் அசிஸ்டென்ட் பொத்தானையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications