இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ்.!
அன்மையில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூன் 16 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது, மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, பின்பு 1,080x2,340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான சாதனம்.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 618ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும்.

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்+ 5எம்பிமேக்ரோ என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி ஃபிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை
இருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது புளூடூத் வி 5, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை 4 ஜி வோல்டி, என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸில் பின்புற கைரேகை சென்சார் உள்ளது. மேலும் இது பிரத்யேக கூகிள் அசிஸ்டென்ட் பொத்தானையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் ரூ.25,400-விலையில் வெளிவரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








