பட்ஜெட் விலையில் ட்ரெண்டிங் மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன்: விமர்சனம்.!
சில நாட்களுக்கு முன்பு மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ஒன் ஆக்சன் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 13999 ரூபாய் ஆக உள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ப்ளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வரும் என்று மோட்டோரோலா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்திற்கு கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா ஒன் ஆக்ஷன்
இப்போது வரும் ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் 3 ரியர் கேமரா அமைப்புகளுடன் தான் வருகிறது. குறிப்பாக சியோமி நிறுவனம் அதிக அளவில் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது, சியோமி நிறுவனமும் 3 ரியர் கேமரா அமைப்புகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அதிக அளவில் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி நிறுவனத்திற்கு போட்டியாக தான் மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனை பொருத்தவரை அருமையான சிப்செட் வசதி மற்றும் பெரிய டிஸ்ப்ளே வசதிகளுடன் வெளிவந்துள்ளது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தி உள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

சிறந்த டிஸ்ப்ளே வசதி
மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 21:19 என்ற திரை விகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக வீடியோ கேமிங் மற்றும் வீடியோக்களை பார்க்க அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் போன் மாடல். மேலும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எதிர்பார்க்கப்பட்ட சிப்செட் வசதி
மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனில் மென்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆக்டோ கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9609 சிப்செட் உடன் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் மாலி ஜி72 ஜிபியூ வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் அப்டேட் வழங்கப்படும் என்பதால் இந்த ஸ்மார்ட்போனுக்கும் கட்டாயம் கிடைக்கும். அதேசமயம் இந்த ஸ்மார்ட்போனின் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக தெளிவான ஆடியோவை பெற மென்பொருள் மற்றும் வன்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.

தெளிவான மற்றும் அருமையான கேமரா அம்சம்
மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் சாதனத்தின் பின்புறம் 12 எம்பி ப்ரைமரி சென்சார் +16 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ்+5 எம்பி டெத் சென்சார் என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு 12 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு வசதிகளுடன் இந்த ஸ்மார்ட் போன் வெளிவந்துள்ளது பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போன் மிகவும் அருமையாக பயன்படும, அதேசமயம் கூடுதலான லென்ஸ் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் போனை இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

பேட்டரி மற்றும் இணைப்புகள் ஆதரவுகள்
இந்த ஸ்மார்ட் போனில் நீண்ட நேரம் தாங்க கூடிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 3500 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இந்த சாதனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வைபை 4ஜி போல்ட் யுஎஸ்பி டைப் சி போர்ட் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்புகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலை
4 ஜிபி ரேம் கொண்ட மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனின் உண்மைகளை 13999 ஆக உள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட் போன்களை விட சிறந்த தரம் மற்றும் அருமையான சிப்செட், அட்டகாசமான கேமரா, சேர்ந்த பாதுகாப்பு வசதி, பெரிய டிஸ்ப்ளே போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட் போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் கண்டிப்பாக வாங்க சிறந்தது.


Click it and Unblock the Notifications