ஆகஸ்ட் 23: மிரட்டலான மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
மோட்டோரோலா நிறுவனம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி இந்தியாவில் அதன் மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான டிஸ்பிளே:
இந்த மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 21:9 என்ற திரைவிகிதம் மற்றும் 2520 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட் வசதி:
இந்த ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9609 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி:
மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா அமைப்பு:
மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 12எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் என பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடக் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் ஆக்ஷன்:
மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.20,400-என்கிற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications