Home
Mobile

மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ஐ இந்தியாவில் வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த புதுப்பிப்பு சமீபத்திய பிழை திருத்தங்கள் மற்றும் புதிய பாதுகாப்பு இணைப்புடன் சமீபத்திய இயக்க முறைமையைக் கொண்டுவருகிறது. மேலும் கூடிய விரைவில் அனைத்து மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருமையான டிஸ்பிளே

அருமையான டிஸ்பிளே

மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் சாதனத்தில் 6.3-இனச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு 1080x2520 பிக்சல் திர்மானம் மற்றும் 21:9என்கிற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9609எஸ்ஒசி சிப்செட் உடன் 2.2ஜிகாஹெர்ட்ஸ் மாலி ஜி72 ஜிபியு வசதியும் உள்ளது.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலான கேமரா வசதி

மிரட்டலான கேமரா வசதி

மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த்
சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 12எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த
அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட பேட்டரி

எதிர்பார்க்கப்பட்ட பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம்
ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola One Action Android 10 update starts rolling out in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X