மோட்டோரோலா ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா ஒன் 5ஜி ஸ்;மார்ட்போன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்திய சந்தையில் மோட்டோரோலா ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 21:9 என்ற திரைவிகிதம், 1080 × 2520 பிக்சல் திர்மானம், எச்டிஆர் 10 ஆதரவு, 90Hz refresh rate மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765 5ஜி 7என்எம் பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு ஆதரவு இடம்பெற்றுள்ளது, எனவே கேமிங் போன்ற அம்சங்களுக்கும் மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக 1டிபி வரைமெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் கைரேகை சென்சார் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

மோட்டோரோலா ஒன் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் 16எம்பி மெயின் கேமரா + 8எம்பி வைடு லென்ஸ் என இரண்டு செல்பீ கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி, 4ஜி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனஸ், கலிலியோ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த மோட்டோரோலா ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ரூ.36,660-விலையில் வெளிவரும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications