இதுக்கு தானே இந்தியாவே வெயிட்டிங்.. 12GB ரேம் உடன் Motorola வின் முரட்டு போன்!
மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் "முரட்டு ஸ்மார்ட்போன்" ஒன்று விரைவில், இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன மோட்டோரோலா எட்ஜ் 70 5ஜி (Motorola Edge 70 5G) மாடல் ஆகும்.
சரியான வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், மோட்டோரோலா எட்ஜ் 70 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கலர் ஆப்ஷன்கள் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. கூடவே இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

டிப்ஸ்டர் பராஸ் குக்லானி (@passionategeekz) வழியாக கிடைத்த தகவலின்படி மோட்டோரோலா எட்ஜ் 70 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தோராயமாக ரூ.70,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இது Pantone Bronze Green, Pantone Gadget Gray மற்றும் Pantone Lily Pad ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் சீனாவில் அறிமுகமாகவுள்ள மோட்டோ எக்ஸ் 70 ஏர் (Moto X70 Air) மாடலின் "மறுபெயரிடப்பட்ட" பதிப்பாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ எக்ஸ் 70 ஏர் மாடல் ஆனது இந்த மாத இறுதியில் சீன சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்றுடன் முடியும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 விற்பனையில் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் ஆபர்கள்: மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோவின் (Motorola Edge 60 Pro) 8 ஜிபி + 256 ஜிபி ரேம் ஆப்ஷன் அதன் அசல் விலையான ரூ.29,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு விற்கப்படும்.
இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.30,999 க்கு பதிலாக ரூ. 28,999 க்கும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஆப்ஷன் ரூ.34,999 க்கு பதிலாக ரூ.32,999 க்கும் விற்கப்படும். இதேபோல், மோட்டோரோலா ரேஸர் 60 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.49,999 ஆகும்.
இதேபோல மோடோடோ ஜி96 5ஜி (Moto G96 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.19,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கும். மோட்டோ ஜி86 பவர் (Moto G86 Power) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும்
மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 Stylus) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும். மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G ) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.17,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும்.
மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.12,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G) ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும்


Click it and Unblock the Notifications








