பட்ஜெட் கிங் Mobile.. ரூ.16,000 விலையில்.. Motorola-வின் 4 வருட வாரன்டி.. மொத்த போனும் சூப்பர்.. எந்த மாடல்?
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் இன்று இரண்டு புதிய ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இன்று மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ரேஸர் 50 சீரிஸ் (Moto Razr 50 Series) ஸ்மார்ட்போன்களையும், இத்துடன் சேர்த்து புதிய பட்ஜெட் விருப்பமாக (Budget segment) மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) என்ற மற்றொரு ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் மோட்டோ S50 நியோ சாதனம் பட்ஜெட் விலையில் 4 வரும் வாரன்டியுடன் (4 Years Warranty) வெளிவரும் உலகின் முதல் சாதனம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய பட்ஜெட் செக்மென்ட் விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) ஸ்மார்ட்போன் சாதனம் இன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.67" இன்ச் முழு எச்டி பிளஸ் (FHD+) தரத்தை வழங்கும் 120Hz pOLED டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 360Hz டச் சாம்பிளிங் அம்சத்தை கொண்டுள்ளது. இது 1600 நீட்ஸ் பிரைட்னஸ் உடன் வருகிறது.

4 வருட வாரன்டியுடன் புதிய மோட்டோ S50 நியோ (Moto S50 Neo With 4 Years Warranty):
இந்த புதிய மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 3 சிப்செட் உடன் வெளி வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 12GB LPDDR4x ரேம் (RAM) உடன் 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் மற்றும் 512GB ஸ்டோரேஜ் (Storage) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் ஸ்டோரேஜ்ஜிற்காக 1TB வரையிலான மைக்ரோஎஸ்டி மெமரி (microSD Memory)விருப்பமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 50MP + 8MP கொண்ட ரியர் கேமராவுடன் (Camera) முன்பக்கத்தில், 32MP செல்பி கேமராவை வழங்குகிறது. இதன் பின்புறம் நானோ லெதர் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 14 உடன் மை யுஎக்ஸ் (Android 14 with My UX) இயந்துதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 5000mAh பேட்டரி (Battery) உடன் 30W பாஸ்ட் சார்ஜிங் (Fast charging) உடன் வருகிறது.
இந்த புதிய மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) ஸ்மார்ட்போன் சாதனம் ப்ளூ (Blue), கிரீன் (Green) மற்றும் க்ரேய் (Grey) நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது சீனாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டோ S50 நியோ சாதனம் 3 ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளிவந்துள்ளது. இது வரும் ஜூன் 28, 2024 ஆம் தேதி முதல் சீனாவில் முன்கூட்டியே ஆர்டர் செய்ய கிடைக்கும்.
மோட்டோ S50 நியோ விலை (Moto S50 Neo Price):
அதேபோல், இந்த புதிய மோட்டோ S50 நியோ ஸ்மார்ட்போன் சாதனம் ஜூலை மாதத்தில் இந்தியா உட்பட உலக சந்தைகளில் மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) என்ற பெயருடன் வெளிவருமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ S50 நியோ போனின் 8GB + 256GB மாடல் ரூ. 16,000 விலையிலும், 12GB + 256GB மாடல் ரூ. 18,000 விலையிலும், 12GB + 512GB மாடல் ரூ. 21,000 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications