Home
Mobile

புதிய 'வெப்டாப்' அப்ளிக்கேஷனுடன் மோட்டோ ஸ்மார்ட்போன்!

By Super
புதிய 'வெப்டாப்' அப்ளிக்கேஷனுடன் மோட்டோ ஸ்மார்ட்போன்!

ஸ்மார்ட்போன் மார்க்கெட்டின் வளர்ச்சி எகிடுதகிடாக வளர்ந்து வருகிறது. மொபைல்போன் மீதான ஈர்ப்பு தற்போது சகல வசதிகளுடன் வரும் ஸ்மார்ட்போன் பக்கம் திரும்பியுள்ளது.

இதைக்கருத்தில்க்கொண்டு, புதிய புதிய வசதிகளுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில், ஸ்மார்ட்போனில் தினம் வாசம் செய்ய வேண்டியவர்களுக்கு ஏற்ற வகையில் புதிய ஸ்மார்ட்போனை எம்டி-917 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மோட்டோரோலா.

எம்டி-917 மொபைல் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் இயங்குதளம் கொண்டது. இந்த மொபைலில் ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்கிரேடு செய்யும் வசதியையும் பெறலாம் என்று கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்களை பிரம்மிக்க வைக்கும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் கொண்டதாக இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வருகிறது.. இதில் 3ஜி நெட்வொர்க் வசதியையும் பெற முடியும்.

இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் 4.5 இஞ்ச் திரை, அசத்தும் விதமாக 1280 X 720 திரை துல்லியத்தை வழங்கும். திரை துல்லியமே இவ்வளவு அதிகமாக இருக்கையில், கேமரா நிச்சயம் அதிக துல்லியத்தை கொடுக்கும் விதத்தில் தான் இருக்கும். இந்த மொபைல் 13 மெகா பிக்ஸல் கேமரா கொண்டது.

இதனால் 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பெற முடியும்.இதில் புதிதாக எம்டி-917 மொபைலில் "வெப்டாப்" என்ற அப்ளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முழுவதுமாக கெல்வர் ஃபைபர் கொண்டுள்ளதால் கீறல்கள் விழாமல் இருக்கும். இது பார்ப்பதற்கு மிக கவர்ச்சிகரமான தோற்றத்தை கொண்டுள்ளது.

மோட்டோரோலா எம்டி-917 ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் மாதத்தில் சீன நாட்டில் அறிமுகம் செய்யப்படும். அதன் பிறகு தான் சர்வதேச சந்தைக்கு வரும். இந்த எம்டி-917 ஸ்மார்ட்போனின் விலையை மோட்டோரோலா நிறுவனம் இன்னும் வெளிடவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X