ரஜினி ஸ்டைலில் மடக்கி திறக்க ஓர் புதிய ஸ்மார்ட்போன்!

மடக்கி திறக்கும் வசதிகொண்ட மொபைல்போன் தயாரிப்பில் பெயர் வாங்கிய மோட்டோராலா நிறுவனம் தற்போது புதிய ப்ளிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
மோட்டோஸ்மார்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய ப்ளிப் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கிறது. 3.2 இஞ்ச் அளவில் வந்திருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மல்டி டச் தொடுதிரையை பெற்றிருக்கிறது.
இதில் 800 மெகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டிருப்பதால் செயல் திறனில் வேகம் காட்டு்ம். 5 மெகா பிக்ஸல் கொண்ட முதன்மை கேமராவும், 0.3 மெகாபிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவும் உள்ளது.
3.0 ப்ளூடூத், ஜிபிஆர்எஸ் ஆகிய தொடர்பு வசதிகளை கொண்ட இந்த போன் 3ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும். அனைத்து பார்மெட் ஆடியோ மற்றும் வீடியோ பைல்களையும் சப்போர்ட் செய்யும் என்பதால் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு குறைவிருக்காது.
இதில், 1540 எம்ஏஎச் திறன் கொண்ட லித்தியம் அயான் ஸ்டான்டர்டு பேட்டரி உள்ளதால் 500 மணி நேர ஸ்டான் பை நேரத்தையும், 9 மணிநேரம் டாக்டைமையும் வழங்கும்.
மடக்கி திறக்கும் வசதி கொண்ட ஸ்டைலான ஸ்மார்ட்போன் வேண்டுவோர்க்கான தேர்வில் இடம் பிடிக்கும் அத்துனை அம்சங்களையும் கொண்டிருக்கும் இந்த போனின் விலை விபரங்களை மோட்டோரோலா விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
