அறிமுகம் : மோட்டோ இசெட்2 பிளே (விலை & சிறப்பம்சங்கள்).!
மோட்டோ இசெட்2 பிளே இரண்டு மாடல்களில் வருகிறது, ஒரு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு கொண்டு வருகிறது. 2டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டின் மூலம் விரிவாக்க
மிகவும் எதிர்பார்க்பட்ட லெனோவா நிறுவனத்தின் சொந்த மோட்டோரோலா கருவியான மோட்டோ இசெட்2 பிளே (அதன் இரண்டாம் தலைமுறை கருவி) அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ இசெட்2 ப்ளே ஒரு 5.5 அங்குல முழு எச்டி (1080 x 1920 பிக்சல்கள்) கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு கொண்ட சூப்பர்அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 2.2 ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஒரு ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 626 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

மோட்டோரோலா மோட்டோ இசெட்2 பிளே இரண்டு மாடல்களில் வருகிறது, ஒரு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு கொண்டு வருகிறது. 2டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டின் மூலம் விரிவாக்க ஆதரவு வழங்கும்.
கேமரா துறையயை பொறுத்தம்மட்டில் மோட்டோ இசெட்2 ப்ளே லேசர் மற்றும் இரட்டை ஆட்டோபோகஸ் லென்ஸ், எப் / 1.7 துளை மற்றும் இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா கொண்டுள்ளது. முன்பக்கம், ஒரு 5 மெகாபிக்சல் அகல கோணம் செல்பீ கேமராவும் மற்றும் பின்புற கேமரா போன்றே இரட்டை எல்இடி கொண்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் இதன் பிளாஷை ஒரு வண்ண தொடர்புடைய வெப்பநிலையை (சிசிடி) இரட்டை-எல்இடி ப்ளாஷ் என்று அழைக்கிறது, இது இயற்கை காட்சிகளை அவ்வாறே எடுக்கும் திறன் கொண்டது என்றும் கூறுகிறது.
முந்தைய மோட்டோ ஸ்மார்ட்போன்கள் போலவே, இந்த புதிய மோட்டோ இசெட்2 கருவியும் கைரேகை சென்சாரை ஹோம் பொத்தாநில் கொண்டுள்ளது மற்றும் நீர் விரட்டும் நானோ-பூச்சு கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது (பெட்டிக்கு வெளியே) மற்றும் யூஎஸ்பி டைப்-சி மற்றும் டர்போ சார்ஜ் திறன் கொண்ட ஒரு 3000எம்ஏச் பேட்டரித்திறன் கொண்டுள்ளது இது வெறும் 30 நிமிடங்களில் 50 சதவிகிதம் சார்ஜ் செய்யும் என்று நிறுவனம் தெரிவிக்கிறது.
மோட்டோ இசெட்2 ப்ளே கருவியில் கூடுதலாக லெனோவாவின் நான்கு புதிய மோட்டோ மோடஸ் (Mods) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.79 டாலர்களுக்கு புதிய ஜேபிஎல் சவுண்ட்போஸ்ட் 2 மற்றும் டர்போ பேவர் பேக்கும், வயர்லெஸ் சார்ஜிங் உடனான புதிய மோட்டோ ஷெல்ஸ் 39 டாலருக்கும் இறுதியாக, ஒரு புதிய மோட்டோ கேம் பேட் 79 டாலருக்கும் என மொத்தம் நான்கு மோட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ கேம் பேட் தவிர, மற்ற எல்லா மோட்டோ மோட்ஸ்களும் ஜூலையில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும். கேம் பேட் இந்தாண்டு கோடைக்கு பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ இசெட்2 ப்ளே ஜூலையின் ஆரம்பத்தில் 499 டாலருக்குத் துவங்கும். மற்ற சந்தைகளுக்கான தொலைபேசி விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விவரங்கள் ஏதுமில்லை குறிப்பாக இந்தியாவில் எப்போது வெளியாகும் என்று ஏதும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications