Home
Mobile

மோட்டோ இசட் : கவர்ந்திழுக்கும் அம்சங்கள்.!

By Meganathan

கடந்த ஆண்டு அறிமுகமான மோட்டோ எக்ஸ் மாடல் கருவியின் அடுத்த மாடல் கருவி தான் மோட்டோ இசட். அமெரிக்காவில் நடைபெற்ற டெக் வோல்டு 2016 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கருவி மோட்டோ மாட்ஸ் போன்ற துணை கருவிகளுடன் கிடைக்கின்றது.

செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கும் மோட்டோ இசட் கருவியை வாங்க கவர்ந்திழுக்கும் அம்சங்கள் ஸ்லைடர்களில்..!

01

01

மோட்டோ இசட் ஸ்மார்ட்போன் விமானம் தயாரிக்க பயன்படும் அலுமினியம் மற்ரும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 5.2 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவியின் எடை மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

02

02

மோட்டோ இசட் ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் குவாட் எச்டி ஏம்ஒஎல்இடி திரை மற்றும் 1440பி ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இதோடு கொரில்லா கிளாஸ் கொண்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

03

03

மோட்டோ இசட் கருவியானது 2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர், குவால்காம் மற்றும் அட்ரினோ 530 ஜிபியு கொண்டுள்ளது. இதோடு 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளதால் பல்வேறு செயலிகளை ஒரே சமயத்தில் பயன்படுத்தினாலும் வேகம் குறையாமல் இருக்கும்.

04

04

மோட்டோ இசட் கருவி 32ஜிபி / 64 ஜிபி என இரு வித இன்டர்னல் மெமரி கொண்ட பதிப்பாக வெளியாகின்றது. இவை அதிகபட்சம் 2டிபி அதாவது 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கின்றது. இதோடு ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகின்றது.

05

05

மோட்டோ இசட் கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ், லேஸர் ஆட்டோஃபோகஸ், மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் முன்பக்க கேமராவிற்கு வைடு-ஆங்கிள் லென்ஸ், எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

06

06

மோட்டோ இசட் கருவியில் வழங்கப்பட்டுள்ள நானோ-கோட்டிங் இதனை மழையில் நனைந்தாலும் எதுவும் ஆகாமல் பார்த்து கொள்கின்றது.

07

07

மோட்டோ இசட் கருவியுடன் வழங்கப்படும் மோட்டோ மாட்ஸ் கருவியில் பவர் பேங்க், ஜெபிஎல் சவுண்டு பூஸ்ட், மோட்டோ இன்ஸ்டா-ஷேர் ப்ரோஜெக்டர், மோட்டோ ஷெல்ஸ் போன்ற அம்சங்களை வழங்குகின்றது.

08

08

மோட்டோ இசட் கருவி கைரேகை வசதி வழங்கப்பட்டுள்ளதால் கருவியை எளிதாக அன்லாக் செய்வதோடு பாதுகாப்பானதாகவும் மாற்றுகின்றது.

09

09

2600 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோ இசட் கருவியானது டர்போ சார்ஜிங் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் கருவியினை 15 நிமிடம் சார்ஜ் செய்து சுமார் 8 மணி நேரம் பயன்படுத்த முடியும்.

10

10

மற்ற ஸ்மார்ட்போன்களை போன்று மோட்டோ இசட் கருவியில் 4ஜி எல்டிஇ, வை-பை, என்எஃப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் முன் பக்க ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Motorola Moto Z Promising Features About the Flagship Smartphone Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X