Home
Mobile

ஸ்மார்ட்போன் மார்கெட்டிற்கு புது வரவு... மோட்டோ எக்ஸ்டி-535!

By Super
ஸ்மார்ட்போன் மார்கெட்டிற்கு புது வரவு... மோட்டோ எக்ஸ்டி-535!

தொழில் நுட்பத்திலும், வடிவமைப்பிலும் கவரும் வகையில் நிறைய ஸ்மார்ட்போன்களை கொடுத்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். இந்நிறுவனம் மோட்டோ எக்ஸ்டி-535 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு டெஃபி மினி ஸ்மார்ட்போனை போலவே இருக்கும். ஆனாலும் டெஃபி மினி ஸ்மார்ட்போனை விடவும், இந்த மோட்டோ எக்ஸ்டி-535 ஸ்மார்ட்போன் தோற்றத்தில் சற்று பெரியதாக இருக்கும்.

நேர்த்தியான வடிவமைப்பை கொண்ட மோட்டோ எக்ஸ்டி-535 ஸ்மார்ட்போன் சிம்பிள் மோனோ பிளாக் வடிமைப்பை கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.5 இயங்குதளத்தில் இயங்கும். 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆற்றல் வாய்ந்த கியூவள்காம் ஏ பிராசஸர் கொண்டது.

4.5 இஞ்ச் எல்சிடி டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. இந்த திரையினால் 480 X 845 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். டியூவல் கேமராவினை கொண்ட இந்த எக்ஸ்டி-535 ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவும், 0.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் வழங்கும். 109 கிராம் இலகு எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஜிஎஸ்எம், யூஎம்டிஎஸ் போன்ற தொழில் நுட்பத்திற்கும் சப்போர்ட் செய்யும்.

இதன் வைபை வசதியினால் சிறப்பாக பிரவுசிங் வசதியினை பெற முடியும். இதில் யூஎஸ்பி 2.0 வெர்ஷன், புளூடூத் போன்ற வசதிகளின் பயன்பாட்டினையும் பெறலாம். இந்த மோட்டோ எக்ஸ்டி-535 ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்றும், அனைவரும் வாங்க கூடிய வகையில் கவர்ச்சிகரமான விலை கொண்டதாக இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X