மோட்டிவேட் செய்ய வரும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்!

புதிய பல வசதிகளுடன் மோட்டோரோலா நிறுவனம் எக்ஸ்டி-390 என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. பல தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரை வசதியினை கொடுக்கும். இதன் திரை மூலம் 240 X 320 திரை துல்லியத்தினையும் எளிதாக பெற முடியும்.
பிளாக் மற்றும் பிரவுன் நிறத்தில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்பதால் பல ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் சிறப்புகளையும் இதில் பெற்று பயனடையலாம்.
இதன் 600 மெகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி-6573 பிராசஸரையும் கொண்டது என்பதால், வேகமான செயல்பாட்டிற்கு துணை புரியும். இந்த ஸ்மார்ட்போனில் டியூவல் சிம் வசதியினையும் எளிதாக பெற முடியும்.
அழகான புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பெற இந்த ஸ்மார்ட்போனில் 3.1 மெகா பிக்ஸல் கேமரா வசதியும் உள்ளது. 32ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்தி கொள்ள இதன் எக்ஸ்டர்னல் மெமரி சப்போர்ட் செய்யும். பொழுதுபோக்கு அம்சமாக இந்த ஸ்மார்ட்போனில் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதியினையும் பெற முடியும்.
முழுமையாக 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதியினை எக்ஸ்டி-390 ஸ்மார்ட்போன் வழங்கும். மோட்டரோலாவின் இந்த எக்ஸ்டி-390 ஸ்மார்ட்போன் விலை சரிவர வெளியாகவில்லை என்றாலும், இந்த ஸ்மார்ட்போனை கவர்ச்சிகரமான விலையில் பெறலாம் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications