ஸ்னாப்டிராகன்660 செயலி உடன் வெளிவரும் புதிய மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4.!
மோட்டோ எக்ஸ் 4 பொருத்தவரை 3800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது.!
மோட்டோ எக்ஸ் 4 என்ற ஸ்மார்ட்போன் தகவல் பற்றி தற்போது ஆன்லைனில் பல விவரங்கள் கசிந்துள்ளன, புதிய செயல்திறன் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் பல திறமைகளைக் கொண்டுள்ளன என அந்நிறுவனம் தெரிவித்துள்ளன.
மோட்டோரோலா நிறுவனம் பல்வேறு மொபைல் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளன. தற்போது அறிமுகப்படுத்தும் இந்த மோட்டோ எக்ஸ் 4 மாடல் சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐபி68 என்ற சான்றிதழ் பெற்றுள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.2 அங்குல அளவு முழு எச்டி டிஸ்பிளே என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 வீடியோ பிக்சல் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

எல்இடி ஃப்ளாஷ்:
மோட்டோ எக்ஸ் 4 பின்புற கேமரா 12.3 மெகா பிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் அடக்கம்

4ஜிபி ரேம்:
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மற்றும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 128ஜிபி வரை மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

ஸ்னாப்டிராகன்660 :
மோட்டோ எக்ஸ் 4 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 2.45ஜிகாஹெர்ட்ஸ்
குவால்காம் ஸ்னாப்டிராகன்660 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
மோட்டோ எக்ஸ் 4 பொருத்தவரை 3800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. மேலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications