அறிமுகம் : மோட்டோ எக்ஸ் 4 கவனிக்க வேண்டிய 5 சிறப்பம்சங்கள்.!

|

இந்த வருடத்தின் ஐஎப்ஏ-வின் மிகசிறந்த கருவிகளில் ஒன்றாக மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனும் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை.

மற்ற உற்பத்தியாளர்கள் சக்தி வாய்ந்த செயலிகள் மற்றும் முதன்மை தர கண்ணாடியுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கியிருந்தாலும், லெனோவாவிற்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனம், வழக்கத்தைவிட சற்றே குறைவான அம்சங்களுடன் அதன் புதிய மோட்டோ எக்ஸ் 4 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

முதன்மை சாதனைகளோடு போட்டியிட தவறினாலும், மிட்ரேன்ஜ் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் மத்தியில் மோட்டோ எக்ஸ் 4 - ஒரு முதன்மை தொலைபேசி தான் என்பதை உணர்ந்தும் அதன் ஐந்து முக்கிய அம்சங்களை பற்றிய தொகுப்பே இது.

ஸ்னாப்டிராகன் 630

ஸ்னாப்டிராகன் 630

மோட்டோ எக்ஸ்4 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 கொண்டுள்ளது.இது கருவியின் செயல்திறன் மற்றும் பேட்டரி ஆயுளை அதிகரிக்கும் இலக்கை கொண்டிருக்கும். உடன் இதன் அட்ரெனோ 580 ஜிபியூ மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் உடன் வருகிறது. ஒரு 3ஜிபி + 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு அல்லது 4ஜிபி + 64ஜிபி உள்ளடக்க சேமிப்பானது பயனரின் தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் உடன் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை மெமரி நீட்டிப்பும் வழங்குகிறது.

கேமராக்கள்

கேமராக்கள்

ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது. அதாவது எப்/2.0 துளை கொண்ட 12எம்பி சென்சார் மற்றும் 120 டிகிரி வியூ வழங்கும் ஒரு 8எம்பி பரந்த கோண லென்ஸ் சென்சார் கொண்டுள்ளது. முன்பக்கம், ஒரு எப்/ 2.0 துளை கொண்ட ஒரு 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்கள்

ப்ளூடூத் 5.0, அதன் வழியாக பல்வேறு ப்ளூடூத் ஸ்பீக்கர்களையும் ஸ்ட்ரீம்களையும் புதிய அனுபவத்தில் வழங்கும் சரவுண்ட் சவுண்ட் அம்சம் கொண்டுள்ளது. உடன் க்ளோநாஸ், என்எப்சி, யூஎஸ்பி டைப்-சி, மற்றும் 4ஜி வோல்ட், ஜிபிஎஸ் ஆகிய ஆதரவுகளை வழங்குகிறது.

கட்டமைப்பு

கட்டமைப்பு

இந்த மோட்டோரோலா கருவியின் மூலைகள் வெட்டபடவில்லை. இக்கருவி திறமையான கண்ணாடி மற்றும் உலோக பாடியை கொண்டுள்ளது. ஆனால் அது தோற்றத்துக்கு மட்டும் அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் இந்த தொலைபேசி ஐபி68 நீர் எதிர்ப்பு சான்றிதழ் பெற்றுள்ளது. இதன் 3000எம்ஏஎச் டர்போ பவர் பேட்டரியானது அதன் 5.2 அங்குல 1080பி டிஸ்பிளேவை திறம்பட செயல்பட வைக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

போர்டில் அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டென்ட்

போர்டில் அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டென்ட்

இக்கருவியில், கூகுள் அசிஸ்டண்ட் இடம்பெறும். மறுகையில் மோட்டோரோலா நிறுவனத்தின் சமீபத்திய வரலாற்றில் முதன்முறையாக இந்த சாதனத்தில் அலெக்ஸா இடம்பெறுகிறது. இனி பயனர்கள் சாதனத்தை கையாள ஒரு விரலைக்கூட பயன்படுத்த வேண்டியதில்லை. இந்த இரண்டு செயற்கை நுண்ணறிவு உதவியாளர்களுடன் மோட்டோ எக்ஸ் 4 ஆனது ஸ்மார்ட்போனிற்கு ஒருபடி மேல் சென்று செயல்படும்.

Best Mobiles in India

English summary
Motorola Moto X4 launched: Here are the top 5 features to know. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X