பிப்ரவரி 1 முதல் மோட்டோ 4எக்ஸ் (6ஜிபி ரேம்) இந்திய விற்பனை ஆரம்பம்.!

இதுவரை 4ஜிபி ரேம் மாறுபாடுகளை மட்டுமே மோட்டோரோலா இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுதான் நிறுவனத்தின் முதல் 6ஜிபி ரேம் மாறுபாடு என்பது குறிப்பிடத்தக்கது.

|

மோட்டோரோலா நிறுவனம் வருகிற 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதியன்று இந்தியாவில் அதன் மிட்-ரேன்ஜ் பிரிவின்கீழ் மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாறுபாடு ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

பிப்ரவரி 1 முதல் மோட்டோ 4எக்ஸ் (6ஜிபி ரேம்) இந்திய விற்பனை ஆரம்பம்.!

இந்த புதிய மாறுபாட்டின் வெளியீடு சார்ந்த ட்வீட்டர் அறிவிப்பில் 'வேகமானது, புத்திசாலிதனமானது மற்றும் கூர்மையானது' என்ற வாசகத்தை நிறு ணம் குறிப்பிட்டுள்ளது. பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட், இரண்டு வாரங்களுக்கு முன்பு மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மாறுபாட்டை பட்டியலிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது அந்த பட்டியல் நீக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்கமுறைமை

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்கமுறைமை

அம்சங்களை பொறுத்தமட்டில், மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் உடனாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்கமுறைமை (பெட்டிக்கு வெளியே ) கொண்டு இயங்கும். இதுவரை 4ஜிபி ரேம் மாறுபாடுகளை மட்டுமே மோட்டோரோலா இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுதான் நிறுவனத்தின் முதல் 6ஜிபி ரேம் மாறுபாடு என்பது குறிப்பிடத்தக்கது.

விலை

விலை

சந்தையில் தற்போது மோட்டோ எக்ஸ் 4-ன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு மாதிரியானது ரூ.20,999/-க்கும் மற்றும் அதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் நினைவக மாதிரியானது ரூ..22,999/-க்கும் வாங்க கிடைக்கிறது மற்றும் எதிர்வரும் இதன் ஹை-எண்ட் சேமிப்பு மாதிரியானது (6 ஜிபி ரேம் + 64GB உள் சேமிப்பு) ரூ.24,999/-க்கும் இந்திய சந்தையை அடையுமென எதிர்பார்க்கிறோம்.

பிரீமியம் உணர்வு

பிரீமியம் உணர்வு

மோட்டோ எக்ஸ் 4-ன் இதர அம்சங்களை பற்றி பேசுகையில், இது ரூ.25,000/- என்கிற பட்ஜெட்டில் வாங்குவதற்கு சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். ஒரு அழகான கண்ணாடி சாண்ட்விச் வடிவமைப்பு கொண்டுள்ள இக்கருவி விலைக்கேற்ற பிரீமியம் உணர்வை வழங்கிறது.

முழு எச்டி டிஸ்பிளே

முழு எச்டி டிஸ்பிளே

இது ஒரு 5.2 அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்னர் குறிப்பிட்டபடி இக்கருவி இரண்டு சேமிப்பு மாதிரிகளில் - 2 ஜிபி ரேம் +32 ஜிபி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி - வாங்க கிடைக்கிறது. உடன் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வழியாக சேமிப்பு விரிவாக்க ஆதரவையும் வழங்குகிறது.

v

v

கேமராத்துறையை பொறுத்தமட்டில் இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது.அதாவது 12எம்பி என்கிற ஒரு முதன்மை ஆர்பிஜி சென்சார் உடன் 8எம்பி பரந்த-கோண சென்சார் அளவிலான இரண்டாம் நிலை கேமராவை கொண்டுள்ளது. இது போர்ட்ரெயிட் பயன்முறையை ஆதரிக்கிறது.

16எம்பி செல்பீ கேமரா

16எம்பி செல்பீ கேமரா

முன்பக்கத்தை பொறுத்தமட்டில் ஒரு 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. மோட்டோரோலா இந்தியா ஏற்கனவே மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனிற்கு அதன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ புதுப்பித்தலை உருட்ட ஆரம்பித்து விட்டதால் இக்கருவியும் ஓரியோ அப்டேட்டை பெறுமென நம்பலாம்.

3000எம்ஏஎச் பேட்டரி

3000எம்ஏஎச் பேட்டரி

ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 சான்றிதழ் கொண்டுள்ளது. மேலும் பல ஸ்மார்ட்போன் அறிமுகங்கள் மற்றும் லீக்ஸ் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Motorola Moto X4 With 6GB of RAM and Android 8.0 Oreo to Launch in India on February 1. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X