அமேசான்: ரூ.2000 விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் மோட்டோ எக்ஸ்4.!
ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 சான்றிதழ் கொண்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த
ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.1749 வரை இஎம்ஐ வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்பு வாடிக்கையாளர்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது ரூ.2000 வரை விலை குறைக்கப்படும் என மோட்டோரோலா மற்றும் அமேசான் சார்பில் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

3ஜிபி ரேம் கொண்ட மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.20,999-ஆக உள்ளது, அதன்பின்பு 4ஜிபி ரேம் கொண்ட இந்த சாதனத்தின் விலை ரூ.22,999-எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6ஜிபி கொண்ட மோட்டோ எக்ஸ்4 சாதனத்தின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. குறிப்பாக மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் மாடலுக்கு பிளிப்கார்ட் மற்றும் மோட்டோ ஹப் தளத்தில சில சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்சங்களை பொறுத்தமட்டில், மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் உடனாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்கமுறைமை (பெட்டிக்கு வெளியே ) கொண்டு இயங்கும். இதுவரை 4ஜிபி ரேம் மாறுபாடுகளை மட்டுமே மோட்டோரோலா இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுதான் நிறுவனத்தின் முதல் 6ஜிபி ரேம் மாறுபாடு என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு 5.2 அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்னர் குறிப்பிட்டபடி இக்கருவி இரண்டு சேமிப்பு மாதிரிகளில் - 2 ஜிபி ரேம் +32 ஜிபி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி - வாங்க கிடைக்கிறது. உடன் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வழியாக சேமிப்பு விரிவாக்க ஆதரவையும் வழங்குகிறது.
கேமராத்துறையை பொறுத்தமட்டில் இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது.அதாவது 12எம்பி என்கிற ஒரு முதன்மை ஆர்பிஜி சென்சார் உடன் 8எம்பி பரந்த-கோண சென்சார் அளவிலான இரண்டாம் நிலை கேமராவை கொண்டுள்ளது. இது போர்ட்ரெயிட் பயன்முறையை ஆதரிக்கிறது.

முன்பக்கத்தை பொறுத்தமட்டில் ஒரு 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. மோட்டோரோலா இந்தியா ஏற்கனவே மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனிற்கு அதன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ புதுப்பித்தலை உருட்ட ஆரம்பித்து விட்டதால் இக்கருவியும் ஓரியோ அப்டேட்டை பெறுமென நம்பலாம்.

ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 சான்றிதழ் கொண்டுள்ளது. வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications