மோட்டோரோலா மோட்டோ எம் : ரூ.15.999/-க்கு இந்தியாவில் வெளியீடு.!
மோட்டோரோலா மோட்டோ எம் கருவியானது டிசம்பர் 14-ஆம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் பிரத்தியேகமான விற்பனைக்கு வர இருக்கிறது.
லெனோவாவிற்கு சொந்தமான நிறுவனம் மோட்டோரோலா, இன்று அதன் முதலாவது முழு உலோக உடையிலான ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ எம் கருவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இக்கருவியின் விலை ரூ.15.999/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கருவி ஸ்மார்ட்போன் லெனோவா இசெட்2 பிளஸ் மற்றும் லெனோவா கே4 நோட் ஆகிய கருவிகளுக்கு கடுமையான போட்டியை வழங்கும்.

முதலில் கடந்த மாதம் சீனாவில் அறிவிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனில் அம்சங்கள் முதன்முறையாக இடம்பிடிக்கின்றன. முதல் முழு முதல் முழு உலோக உடல், முதல்முறையாக பின்புறம் பொருத்தபட்ட கைரேகை ஸ்கேனர் ஆகியவைகளை கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள் :
டிஸ்ப்ளே : 5.5-அங்குல முழு எச்டி சூப்பர் அமோஎல்இடி
ப்ராசஸர் : ஆக்டா-கோர் சிப் (2.0 ஜிகாஹெர்ட்ஸ்) கொண்ட ஒரு மீடியா டெக் ஹெலியோ பி10 எஸ்ஓசி
பேட்டரி : 3,050எம்ஏஎச்
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ (பெட்டிக்கு வெளியே)
ரேம் : 3ஜிபி
உள்ளடக்க சேமிப்பு : 32 ஜிபி
இரண்டாம் மாறுபாடு ரேம் : 4ஜிபி
இரண்டாம் மாறுபாடு உள்ளடக்க சேமிப்பு : 64ஜிபி

கேமிரா துறையை பொருத்தமட்டில் மோட்டோரோலா மோட்டோ எம் கருவி இரட்டை எல்இடி ஃப்ளாஷ் மற்றும் பிடிஏஎப் (PDAF) இணைந்த ஒரு 16எம்பி பின்புற கேமிரா மற்றும் செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு உதவும் ஒரு 8எம்பி முன்பக்க கேமிரா கொண்டுள்ளது. முன்பு கூறியது போல, மோட்டோ எம் ரூ.15,999/- என்ற விலையில் பிரத்தியேகமாக ப்ளிப்கார்ட் வழியாக டிசம்பர் 14-ஆம் தேதி முதல் கிடைக்கும். உடன் மோட்டோரோலா மற்றும் ப்ளிப்கார்ட் இரண்டும் இணைந்து, சில பரபரப்பான வெளியீட்டு சலுகைகளையும் வழங்கி வருகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இச்சலுகைகள் டிசம்பர் 15, 2016 அன்று மட்டுமே செல்லுபடியாகும்
- சிறப்பு எக்ஸ்சேன்ஞ் சலுகை ரூ. 2,000/- வரை பழைய தள்ளுபடி
- சிட்டிபேங்க் க்ரெடிட் கார்டுகளுக்கு ரூ.1000/- தள்ளுபடி
- மோட்டோ பல்ஸ் 2 ஹெட்செட்டிற்கு ரூ.1000/- தள்ளுபடி
- இஎம்ஐ திட்டங்கள் ரூ.776/ மாதம் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது.
மேலும் படிக்க
ஜியோனி பி7 : வோல்ட் ஆதரவுடன் ரூ.9,999/- என்ற விலைக்கு அறிமுகம்.!


Click it and Unblock the Notifications








