Home
Mobile

Motorola மோட்டோ ஜி 8 பவர் லைட் மிரட்டலான அம்சங்களுடன் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம்!

மோட்டோரோலா நிறுவனம் இறுதியாக மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தையில் இன்று அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி சீரிஸ் வரிசையில் கிடைக்கக் கூடிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன என்று பார்க்கலாம்.

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட்

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட்

மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த புதிய மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் மிரட்டலான கேமரா அம்சத்துடனும், பெரிய பேட்டரி பேக்கப் உடன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஜி8 பவர் லைட்

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஜி8 பவர் லைட்

அதேபோல், மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியச் சந்தையில் தனது மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் மலிவு விலையில் அட்டகாசமான சிறப்பம்சத்துடன் ஜி8 பவர் லைட் தற்பொழுது அறிமுகமாகியுள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் விவரக்குறிப்புகள்

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் விவரக்குறிப்புகள்

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன், 6.5' இன்ச் மேக்ஸ் விஷன் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் கூடிய வாட்டர் டிராப் நாட்ச் உடன் வருகிறது. இந்த டிஸ்பிளேயின் காட்சி விகிதம் 20: 9 என்ற அளவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் P35 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்டோரேஜ்

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்டோரேஜ்

புதிய மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் கூடுதல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்காகமைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரையிலான விரிவாக்க மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ட்ரிபிள் கேமரா

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ட்ரிபிள் கேமரா

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பக்க கேமராவில் ஒரு 16 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவும், 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

வாட்டர் ட்ரோப் நாட்ச் செல்ஃபி கேமரா

வாட்டர் ட்ரோப் நாட்ச் செல்ஃபி கேமரா

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் முன்பக்கத்தில் 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. பிடிஏஎஃப், எல்இடி ஃபிளாஷ், பொக்கே, எச்டிஆர் மற்றும் பியூட்டி மோடு போன்ற கேமரா அம்சங்களையும் சாதனம் ஆதரிக்கிறது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் பேட்டரி

இந்த புதிய மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் சாதனம் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்துடன் ப்ளோட்வேர் மற்றும் மோட்டோ கெஸ்டர் ஆதரவு இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, மோட்டோ ஜி 8 லைட் வாட்டர் ரெப்பலேண்ட் மற்றும் பின்புறமாகப் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் விலை

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் விலை

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் விலை இந்திய சந்தையில் வெறும் ரூ.8,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்த புதிய மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் சாதனம் மே 29ம் தேதி முதல் பிளிப்கார்ட் ஆன்லைன் போர்டல் வழியாக விற்பனைக்குக் கிடைக்கும் என்று மோட்டோரோலா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் ப்ளூ மற்றும் ராயல் ப்ளூ வண்ண விருப்பங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Moto G8 Power Lite Launched in India Know The Price And Online Availability : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X