6.41-இன்ச் டிஸ்பிளேவுடன் விரைவில் வெளிவரும் மோட்டோ ஜி71 ஸ்மார்ட்போன்.!
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி71 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் XT2169-1 என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மோட்டோ ஜி71 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்புஇந்த சாதனம் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன்வெளிவரும்.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவைக் கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் 2.2ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த மோட்டோ ஜி71 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி71 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் போன்ற பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாமசமான ஸ்மார்ட்போன். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள் உதவியுடன் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி71 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டோ ஜி71 ஸ்மார்ட்போனில் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனம் 180 கிராம் எடையுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை ஆதரவு, என்எப்சி, டூயல்-சிம் ஆதரவு, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது மோட்டோ ஜி71 ஸ்மார்ட்போன். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மோட்டோரோலா நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.அந்த வரிசையில் இந்த மோட்டோ ஜி71 ஸ்மார்ட்போன் மாடலும் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications