மிரட்டலான பேட்டரியுடன் களமிறங்கும் மோட்டோ ஜி7.!
மோட்டோரோலா நிறுவனம் தனது ஜி சீரிஸ் வரிசையில் அடுத்த புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் தனது ஜி சீரிஸ் வரிசையில் அடுத்த புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
மோட்டோ நிறுவனம் இந்த வருடத்தின் இறுதியில் வெளியிட போகும் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பற்றிய சில விபரங்கள் அண்மையில் வலைத்தளங்களில் கசிந்தது.

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்
அதனைத் தொடர்ந்து தற்பொழுது மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன், நான்கு வேரியண்ட்களாக வெளியிடப்படும் என்ற தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த புது மாடல் வேரியண்ட் ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி7 பவர்
முன்னர் வெளியான தகவலின்படி மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் வரிசையில் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளே, மோட்டோ ஜி7 பிளஸ் மற்றும் புது வேரியண்ட் ஸ்மார்ட்போனாக மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

5000 எம்.ஏ.எச் பேட்டரி
மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் மிரட்டலான 5000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் களமிறங்கவுள்ளது. மோட்டோரோலா நிறுவனத்தின் தயாரிப்புகளில் மோட்டோ ஒன் பவர் ஸ்மார்ட்போன் இன் பேட்டரி சேவை அனைவராலும் பாராட்டப்பட்டது. அதே போல் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் இன் பேட்டரி சேவையும் மிரட்டலாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

நிறம்
மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பிளாக், ரெட் மற்றும் சில்வர் ஆகிய மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மோட்டோ நிறுவனம் விரைவில் வெளியிடுமென்றும் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications