Moto G7 Plus ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்!
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கத் துவங்கப்பட்டுள்ளது. தற்சமயம் பிரேசிலல் உள்ள மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைத்துள்ளது புதிய அப்டேட் வரும் வாரங்களில் மற்ற பிராந்தியங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி7 பிளஸ் டிஸ்பிளே
மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.24-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மோட்டோ ஜி7 பிளஸ் சிப்செட்
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மோட்டோ ஜி7 பிளஸ் சேமிப்பு
மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்க்கது.

மோட்டோ ஜி7 பிளஸ் கேமரா
மோட்டோ ஜி7 பிளஸ் சாதனத்தின் பின்புறம் 16எம்பி + 5எம்பி கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 12எம்பி செல்பீ கேமரா, 1080பிக்சல் வீடியோ பதிவு ஆதரவு, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

மோட்டோ ஜி7 பிளஸ் பேட்டரி
மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications