சான்றிதழ் தளத்தில் சிக்கிய மோட்டோ ஜி6; என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது?

பின்புறத்தில், மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் இருப்பது போன்றே - ஒரு இரட்டை கேமரா அமைப்பு உள்ளது.

|

மோட்டோரோலா மோட்டோ ஜி6 அதன் டிஇஎன்ஏஏ (TENAA) தரச்சான்றிதழை பெற்றுள்ளது. இதன் அர்த்தம், மிக விரைவில் இக்கருவி அதன் உத்தியோகபூர்வ வெளியீட்டை நிகழ்த்தும் என்பதாகும்.

சான்றிதழ் தளத்தில் சிக்கிய மோட்டோ ஜி6; என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது?

சான்றிதழ் தளத்தில், கருப்பு நிற மாறுபாட்டில் மட்டுமே காணப்பட்டிருந்தாலும் பல்வேறு வண்ண விருப்பங்களிலும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஇஎன்ஏஏ தளத்தின் வழியாக மோட்டோரோலா மோட்டோ ஜி6-ன் சில வடிவமைப்பு சார்ந்த விவரங்கள் வெளிப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் இருந்தே மோட்டோ ஜி6 ஒரு 18: 9 அளவிலான திரை விகிதத்தை வெளிப்படுத்தி வந்தது, அது தற்போது உறுதியாகியுள்ளது. மறுகையில் நேற்றுவரை உலோக உடல் அமைப்பை கொண்டிருக்குமென நமபப்பட்ட மோட்டோ ஜி6, இன்று கண்ணாடி உடல் அமைப்பை வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவின் கீழ் ஒரு கைரேகை ஸ்கேனர் உட்பொதிக்கப்பட்டுள்ளதை படத்தில் தெளிவாக காண முடிகிறது. உடன் மேல் பக்கத்தில் ஒரு செல்பீ கேமரா, இயர்பீஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் ஒன்றையும் காண முடிகிறது. பின்புறத்தில், மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் இருப்பது போன்றே - ஒரு இரட்டை கேமரா அமைப்பு உள்ளது.

ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில், வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் பவர் பொத்தான் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் சிம் ஸ்லாட்டிற்கான இடத்தை காண முடியவில்லை. ஒருவேளை, சிம் ஸ்லாட் பிளேட் ஆனது முந்தைய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களில் இடம் பெற்றிருப்பதை போன்று மேல்பக்கத்தில் வைக்கப்படலாம்.

சான்றிதழ் தளத்தில் சிக்கிய மோட்டோ ஜி6; என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது?

இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வமான அம்சங்கள் பற்றிய வார்த்தைகள் இல்லை என்றாலும் கூட, முன்னர் வெளியானதொரு தகவலின்படி, மோட்டோ ஜி6 ஆனது, ஒரு 5.7 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே, 2160 x 1080 பிக்சல்கள் என்கிற தீர்மானம், ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்பு, இரட்டை கேமரா அமைப்பு (12 எம்பி + 5 எம்பி), டர்போ சார்ஜ் ஆதரவு கொண்ட 3000எம்ஏஎச், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும்.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil

மோட்டோ ஜி6 பிளஸ் மற்றும் ஜி6 ஆகிய இரு ஸ்மார்ட்போன்களுமே ஐபி67 (நீர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழ்) பெற்றுள்ளதாக கூறப்பட்டாலும், இப்போது வரையிலாக அது சார்ந்த உறுதிப்படுத்தல்கள் எதுவுமில்லை.

Best Mobiles in India

English summary
Motorola Moto G6 Visits TENAA, 18:9 Display and Dual Rear Cameras in Tow. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X