மோட்டோ ஜி5எஸ் பிளஸ் : என்ன பேட்டரித்திறன்.? என்ன விலை.?

|

இறுதியாக கடந்த மே மாதம், மோட்டோரோலாவின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ ஜி5எஸ் பிளஸ் பற்றிய பல வதந்திகள் வெளியானது. இடையில் எந்தவிதமான தகவலும் வெளியாகாமல் இருந்தது. மேலும், எங்களுக்கும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றி எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை.

இருப்பினும், கடந்த வாரங்களில் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளது என்று நாங்கள் கேள்விப்பட்டோம். அப்படியானால், இந்த அறிமுகம் உண்மையானால் நிறுவனத்திடம் இருந்து நாம் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்ற அனுமானம் கிளம்பியது.

புதிய ட்விட்டர் பகிர்வு

அது உண்மை தான், வெளியாகப்போவது மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் தான் என்பதை உறுதி செய்யும் வண்ணம் ஒரு புதிய ட்விட்டர் பகிர்வு மற்றும் கசிவு வெளியாகியுள்ளன. வெளியான ட்விட்டர் தகவல் தொலைபேசி படத்தை மட்டுமின்றி கருவியின் பேட்டரி அளவு மற்றும் கைபேசி விலை பற்றியும் பேசுகிறது.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

எப்படியிருந்தாலும், இந்த ஸ்மார்ட்போன் ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டு வரும் என்று புதிய தகவல் உறுதிப்படுத்துகிறது. அதாவது ஒரு இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு வட்ட தொகுதியை வெளியான படத்தில் நீங்கள் பார்க்கலாம்.

பேட்டரித்திறன்

பேட்டரித்திறன்

சாதனத்தில் எந்த சென்சார் பயன்படுத்தப்படும் என்பது இப்போது நமக்கு தெரியாது. கேமரா பற்றிய தகவலுடன் ஸ்மார்ட்போனின் பேட்டரித்திறன் சார்ந்த தகவலையும் டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார். அப்படியாக ஜி5எஸ் பிளஸ் சாதனத்தில் ஒரு 3068எம்ஏஎச் பேட்டரி இடம்பெறலாம்.

விலை

விலை

இந்த பேட்டரித்திறன் ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனை விட சற்று அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியில், அதே பதிவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,999/- முதல் ரூ.19,999/-க்குள் இருக்கும் என்றும் டிப்ஸ்டர் விலை நிர்ணயத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

5.5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே

5.5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே

இதற்குமுன் வெளியான கசிவுகள், இக்கருவி 5.5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் சிபியூ, ஆண்ட்ராய்டு நௌவ்கட்,மற்றும் முழு மெட்டல் உடல், முன்னால் கைரேகை சென்சார் மற்றும் 3.5 மிமீ ஹெட் ஜாக் போன்ற சில விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. உடன் இந்த ஸ்மார்ட்போன் தங்கம், சாம்பல் மற்றும் வெள்ளி போன்ற வண்ண விருப்பங்களில் வரும் என்றும் முன்னர் வெளியான சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

English summary
Motorola Moto G5S Plus new render, battery capacity and price leaked. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X