இந்தியா : அட்டகாசமான மோட்டோ ஜி5எஸ் மிட்நைட் புளூ எடிஷன் அறிமுகம்.!
மோட்டோ ஜி5எஸ் ரியர் கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி5எஸ் மிட்நைட் புளூ எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, இதற்கு முன்பு ஃபைன் கோல்டு மற்றும் லூனார் கிரே நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது.

இப்போது வெளிவந்துள்ள மோட்டோ ஜி5எஸ் மிட்நைட் புளூ எடிஷன் விலைப் பொறுத்தவரை ரூ.14,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டவையாக உள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது. மேலும் 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு:
ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது மோட்டோ ஜி5எஸ் . மேலும் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:
மோட்டோ ஜி5எஸ் ரியர் கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக்கூறப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
கைரேகை ஸ்கேனர், வைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications