Home
Mobile

விரைவில் 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021.!

மோட்டோரோலா இந்த ஆண்டின் தொடக்கத்தில் மோட்டோ ஜி ஸ்டைலஸ் எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்நிறுவனம் அதன் வரிசையான மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 மாடலில் வேலை செய்துவருகிறது, எனவே இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

விரிவாகப் பார்ப்போம்.

மேலும் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன, அதைப் பற்றிய முழு முழுவிவரங்களையும்விரிவாகப் பார்ப்போம். மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 மாடல் ஆனது எக்ஸ்டி 2115 மாடல் எண்ணைக் கொண்டிருக்கும்.

ஸ்டைலஸ் 2021 மாடலில்

குறிப்பாக மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 மாடலில் 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 மிகவும் எதிர்பார்த்த

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021

மோட்டோரோலா மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும். மேலம் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த சாதனத்தில் 4000 எம்ஏஎச் பேட்டரி

வெளிவந்த தகவலின்படி இந்த சாதனத்தில் 4000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

மோட்டோ ஜி

டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11ax, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, கியூசட்எஸ்எஸ் (எல் 1 + எல் 5), 2 எக்ஸ் யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் என்.எஃப்.சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த மோட்டோரோலா மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Motorola Moto G Stylus 2021 Surfaces with 48MP Quad Cameras and More Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X