மோட்டோ ஜி ப்ரோ பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: புத்தம் புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் சிறந்த மென்பொருள் மற்றும் கேமரா அம்சங்களுடன் வெளிவருகின்றன. தற்சமயம் இந்நிறுவனம்
சார்ப்பில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்
அது என்னவென்றால் இந்நிறுவனத்தின் மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது என்றும். பின்பு இந்த அப்டேட் ஆனது முதலில் ஐக்கிய ராஜ்ஜியத்திலும், விரைவில் மற்ற பகுதிகளிலும் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மோட்டோ ஜி ப்ரோ சாதனத்திற்கு வழங்கப்பட்ட ஆண்ட்ராய்டு 11 அப்டேட் உடன் ஜனவரி ஜனவரி 2021 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. பின்பு இந்த புதிய அப்டேட் ஆனது பபிள், மீடியா கண்ட்ரோ மேம்பாடு, ஸ்கிரீன் ரெக்கார்டிங், பிரைவசி அப்கிரேடுபோன்ற அம்சங்களை வழங்குகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி ப்ரோ டிஸ்பிளே
மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1,080 x 2,300 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.

மோட்டோ ஜி ப்ரோ மெமரி வசதி
இந்த மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

48எம்பி மெயின் கேமரா
மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமரா ஆதரவு இடம்பெற்றுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் எனபல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி
குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவை கொண்டுள்ளது மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போன், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 15வாட் டர்போபவர் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி எல்டிஇ, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக்புளூடூத் வி 5.0 மற்றும் என்எப்சி ஆதரவு, ஜி.பி.எஸ், ஆக்சிலரோமீட்டர், கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார்,
ஆம்பியண்ட் லைட் சென்சார்என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications