Home
Mobile

அட்டகாசமான மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.26,150-ஆக உள்ளது.

ஸ்மார்ட்போன் மாடல் ஆனது

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும். விரைவில் 6ஜிபி ரேம் கொண்ட மாடலையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.

பின்புறம் 48எம்பி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மாடலில் 5000

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் Volcanic Grey மற்றும் Frosted Silver நிறங்களில் வெளிவந்துள்ளது.

உள்ளிட்ட பல்வேறு

வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக்டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Motorola Moto G 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X