4000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் மோட்டோ இ5.!
இக்கருவி 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
மோட்டோரோலா நிறுவனம் எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் என எதரிபார்க்கப்படுகிறது. மேலும் மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ப்ளூடூத் சான்றிதழ் மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி வழங்ப்பட்டுள்ளது. அதன்பின்பு மோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு எப்சிசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மெட்டல் யுனிபாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார்:
மோட்டோரோலா நிறுவனம் தற்போது குறிப்பிட்டுள்ள அறிக்கையில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் வெளிவரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:
இக்கருவி 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக்:
மோட்டோ இ5 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் சிப்செட் அல்லது ஸ்னாப்டிரான் 435 சிப்செட் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது

கேமரா:
பின்புற கேமரா பேசுகையில் ஒற்றை கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புறம் அட்டகாசமான கேமரா மற்றும் எல்இடி ப்ளாஷ் இடம்பெற்றுள்ளது.

பெசல்-லெஸ்:
மோட்டோ இ5 ஸ்மார்ட்போனில் பெசல்-லெஸ் வடிவமைப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4000எம்ஏஎச் பேட்டரியுடன்
வருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications