4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் அசத்தலான மோட்டோ இ5.!
மோட்டோ இ5 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
தற்சமயம் மோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு எப்சிசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. 4000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த அசத்தலான மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மெட்டல் யுனிபாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மீடியாடெக் சிப்செட் வசதியுடன் இக்கருவி வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

கைரேகை சென்சார்:
மோட்டோரோலா நிறுவனம் தற்போது குறிப்பிட்டுள்ள அறிக்கையில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:
இக்கருவி 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக்:
மோட்டோ இ5 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ஏப்ரல்:
வரும் ஏப்ரல் மாதம் இந்த மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

எப்சிசி சான்றிதழ்:
மோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு எப்சிசி சான்றிதழ் வழங்கப்பட்டத்தை அடுத்து மாடல் நம்பர்
வழங்கப்பட்டுள்ளது, அதன்படி மோட்டோ இ5 மாடல் எண்-எக்ஸ்டி1922-4 மற்றும் மோட்டோ இ5 பிளஸ் மாடல் எண்-எக்டி1922-5-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications