ஆன்ட்ராய்டுடன் வரும் மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன்

Posted By: Staff

ஆன்ட்ராய்டுடன் வரும் மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன்

குறைந்த விலையில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட மொபைல்போன்களை வழங்குவதில், மோட்டோரோலா நிறுவனம் எப்போதும் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது.

குறைந்த வசதிகள் கொண்ட மாடல்கள் முதல் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட என அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் சந்தையில் 20க்கும் மேற்பட்ட மாடல்களை அந்த நிறுவனம் வியாபாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய எக்ஸ்டி 316 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்கிறது மோட்டோரோலா.

அச்சு அசலாக பிளாக்பெரி போன் போன்று காட்சியளிக்கும் இந்த புதிய மொபைல்போனில் கிவெர்ட்டி கீபேடு பொருத்தப்பட்டுள்ளது. இது டைப் செய்வதற்கு வெகு எளிதாகவும், வசதியாகவும் இருக்கும்.

இதில், லேட்டஸ்ட் மல்டிமீடி்யா தொழில்நுட்ப வசிதிகள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. எப் ரேடியா மற்றும் ஹோம் தியேட்டர் மற்றும் கூடுதல் ஸ்பீக்கர்களை இயக்கும் வசதியும் உள்ளது.

புளூடூத், வை-பை. யுஎஸ்பி கனெக்ஷன் உள்ளிட்ட அம்சங்களும் இதில் உண்டு. 2ஜி மற்றும் 3ஜி இன்டர்நெட் இணைப்பையும் பெற்றுக்கொள்ளலாம்.

இதன் கேமராவின் திறன் எதிர்பார்க்கும் படியாக இல்லை. புகைப்படங்களை பெரிதாக்கும்போது (டிஜிட்டல் ஜும்) புகைப்படங்களில் அவ்வளவு துல்லியம் காட்டவில்லை என்பது இதன் குறைபாடாக உள்ளது.

32ஜிபி வரை கூடுதல் மெமரி கார்டும் பொருத்திக்கொள்ளலாம். இந்த போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பேர்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

மோட்டோ எக்ஸ்டி 316 சிறப்பம்சங்கள்:

3.2 மெகா பிக்செல் கேமரா

ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது

32 ஜிபி வரை கூடுதல் மெமரி கார்டு சப்போர்ட் செய்யும் வசதி

மல்டிமீடியா வசதி

புளூடூத் மற்றும் வை-பை

2ஜி மற்றும் 3ஜி இன்டர்நெட் இணைப்பை பெறும் வசதி

ஆனால், இதன் விலை பற்றிய விபரங்களை மோட்டோரோலா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், நடுத்தரப் பிரிவு மக்களை கவரும் விலையில் இந்த போனை மோட்டோ களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறுது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot