Home
Mobile

வாட்டர் ப்ரூப் வசதியுடன் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்!

By Karthikeyan
வாட்டர் ப்ரூப் வசதியுடன் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்!

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளான இரண்டு மொபைல்களைக் களமிறக்க இருக்கிறது. இந்த மொபல்களுக்கும் மோட்டோரோலா ரேசர் மேக்ஸ் மற்றும் மோட்டோரோலா ரேசர் வி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன. இந்தியா மட்டும் அல்லாமல் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா களமிறக்க இருக்கிறது.

ஆன்ட்ராய்டு 2.3 ஜஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் வரும் மோட்டோரோலா ரேசர் மேக்ஸ் விரைவில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தைப் பெறும் என்று தெரிகிறது. ஜூன் 21 முதல் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.31,590க்கு வாங்கலாம். ஆனால் ரேசர் வி ஆன்ட்ராய்டு 4.0 இயங்கு தளத்துடன் இந்த ஆண்டின் இறுதியில் களமிறங்க இருக்கிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒரே மாதிரியான டிசைனைக் கொண்டுள்ளன. இவை இரண்டும் ஸ்ப்ளாஷ் கார்ட் கோட்டிங் வசதி கொண்டிருப்பதால் இவை தண்ணீரில் விழுந்தாலும் பாதிப்பு அடைவதில்லை.

ரேசர் மேக்சின் பேட்டரி இந்த ஸ்மார்ட்போனுக்கு 17.6 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் 4.3 இன்ச் அளவில் சூப்பர் எஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளேயுடன் வருவதால் மிகவும் துல்லியமாக இருக்கும். அதோடு 1.2 ஜிஹெர்ட் டூவல் கோர் ப்ராசஸர், 16ஜிபி சேமிப்பு, 1ஜிபி ரேம் மற்றும் 8 எம்பி பின்பக்க மற்றும் முகப்பு கேமரா என்று இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமாக வருகிறது.

அதே நேரத்தில் ரேசர் வி மிகவும் மெல்லியதாக அதே நேரத்தில் பல நிறங்களில் வருகிறது. அதாவது கார்கோல், க்ளேசியர், வெள்ளை மற்றும் ரிபல் பிங்க் ஆகிய நிறங்களில் வருகிறது.

இந்த இரண்டு போன்களும் ஸ்மார்ட் ஆக்சஸன்ஸ் என்ற டூலுடன் வருகின்றன. இதன் மூலம் நாள் முழுவதும் இந்த போன்களின் செட்டிங்கை ஆட்டோமேட் செய்ய முடியும். மேலும் பல வசதிகளுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய வாடிக்கையாளர்களின் மனங்களை கொள்ள அடிக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X