Home
Mobile

இனிக்கும் இசை கேட்க புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்!

By Super
இனிக்கும் இசை கேட்க புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்!

புதிய மோட்டோஸ்மார்ட் மிக்ஸ் மியூசிக் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனின் இயர்போன் மிக நுட்பமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டோஸ்மார்ட் மிக்ஸ் ஸ்மார்ட்போனில் எஸ்ஆர்எஸ் டபிள்யூஓடபிள்யூ எச்டி தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளதால் இதில் ஒளி திறனை மிக துல்லியமாக பெற முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் அகன்ற திரையினை கொண்டது. இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மியூசிக் கேட்பதற்கு அதிக நேரம் ஒத்துழைக்கும். இதில் உள்ள 1,735 எம்ஏஎச் பேட்டரி 30 மணி நேரம் மியூசிக் ப்ளேபேக் வசததிக்கு சப்போர்ட் செய்யும். இந்த ஸ்மார்ட்போனில் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டது.

அதிகமாக இசை கேட்கும் இசை பிரியர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் பொருத்தமானதாக இருக்கும். இசை கேட்பது போன்ற சிறப்பான தொழில் நுட்பத்துடன் சேர்த்து, ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட மோட்டோஸ்மார்ட் மிக்ஸ் மியூசிக் போன்ற ஸ்மார்ட்போன்கள் மொபைல் மார்கெட்டில் கிடைத்தால் சந்தோஷம் தானே.

இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச அளவில் வெளியாவது பற்றி எந்த விவரத்தினையும் மோட்டோரோலா நிறுவனம் இதுவரை குறிப்பிடவில்லை. ஆனால் இதன் விலை விவர தகவல்களை பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,500 விலையை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X