அமெரிக்காவில் மோட்டோரோலா மைல்ஸ்டோன் ப்ளஸ்

Posted By: Staff

அமெரிக்காவில் மோட்டோரோலா மைல்ஸ்டோன் ப்ளஸ்
மோட்டோரோலா நிறுவனம் புதிய ஆண்ட்ராய்டு தொடுதிரையுடன் கூடிய மைல்ஸ்டோன் ப்ளஸ் என்ற மொபைலை செல்லார் சவுத் என்ற வயர்லஸ் வணிக நிறுவனம் மூலம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க நிறுவனமான மோட்டோரோலா எப்பொழுதுமே வாடிக்கையாளர்களின் சேவையில் முன்னனியில் இருக்கக்கூடியதாகும். அந்த வகையில் இந்த புதிய மொபைலை நிறைந்த அம்சங்களுடன் 200 அமெரிக்க டாலர் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது.

மோட்டோரோலா மைல்ஸ்டோன் ப்ளஸ் புதுப்பிக்கப்பட்ட நவீன தொழில் நுட்பத்தை வழங்குகிறது. அதாவது விரைவாக டைப் செய்ய க்யுவெர்டி கீபடை தருகிறது. இதனுடயை தொடுதிரை 3.1 இன்ச் அளவு கொண்ட ஹச்விஜிஎ ஆகும். மேலும் இந்த மொபைல் நெளிவு சுளிவுடன் மிக அழகாக இருக்கிறது.

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 2.2 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதனுடய சேமிப்பு வசதி 8ஜிபி ஆகும். இதனுடயை டிஸைன் ப்ளாக்பெரி மொபைலை ஒத்திருக்கிறது. குறிப்பாக இது தொழில் முனைவோருக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும். மேலும் இந்த மொபைலில் வியாபார ரகசியங்களை பிறர் அறியாத வகையில் நாம் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். மேலும் இது ஜிமெயில் இமெயில் வசதியையும் வழங்குகிறது.

சிறிய தொடுதல் மூலம் ஆடாப் ப்ளாஷ் ப்ளேயருக்குள் நுழைய முடியும். பாதுகாப்பு வசதிக்காக இந்த மொபைல் ஆதன் டெக் ஐபிஸெக் மல்டி ஹெட்டட் விபிஎன் இன்டக்ரேசன் பெற்றுள்ளது. அதனால் எவராலும் நம்முடை பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியாது. மேலும் இந்த மொபைலை இயக்க ரிமோட் வசதியும் உள்ளது. அதற்காக எக்ஸ்ட்ரா எஸ்டி கார்டும் இதில் உள்ளது. இதனால் மோட்டோரோலா மைல்ஸ்டோன் ப்ளஸ் மொபைலில் நமது ரகசிய பைல்களை நிம்மதியாக பாதுகாத்து வைத்திருக்க முடியும்.

இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா மைல்ஸ்டோன் ப்ளஸ் மொபைலை 3.7 இன்ச் தொடுதிரையுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது ஏற்கனவே கூறியது போல் ஆண்ட்ராய்டு 2.2 மொபைலாகும். மேலும் இது சூம் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகா பிக்ஸல் கேமராவை வழங்குகிறது. பல மீடியா லிங் கொண்ட இந்த புதிய மொபைலின் விலை ரூ.17,999 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot